அமெரிக்காவை மீண்டும் சீண்டிய வடகொரியா
2017-10-12 15:19:13 | Leftinraj

அமெரிக்காவை தாக்குவதற்கு தயாராகி வருவதாக வடகொரியா ஏற்கனவே அறிவித்தது.

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐ.நா. சபையில் பேசும்போது, வடகொரியாவை கடுமையாக எச்சரித்தார். அந்த நாட்டையே அழித்து விடுவோம் என்று கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்கா தற்போது கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் வடகொரியாவை ஒட்டி உள்ள பகுதிகளில் பறந்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.

இது, வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக வடகொரிய வெளியுறவு மந்திரி ரியாங்கோ கூறியதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவை கடுமையாக மிரட்டி உள்ளார்.

நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அதற்கு தயாராகி விட்டோம்.

டொனால்டு டிரம்ப் மனநிலை பாதித்தவர் போல் செயல்படுகிறார். இதனால் தான் எங்களை மிரட்டுவதற்காக ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவை விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

TOTAL VIEWS : 150
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
o4ndi
  PLEASE ENTER CAPTA VALUE.