கனடா வீதியில் சிதறிக்கிடந்த பணம் நிரம்பிய கடித உறைகள்
2017-03-27 13:07:47 | General

கனடாவின் நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் என்ற பகுதியில் நகரம் முழுக்க காசு திணிக்கப்பட்ட கடித உறைகள் சிந்தி கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் பகுதியில் கிட்டத்தட்ட 100 உறைகள் வரை நகரின் எல்லைக்குள் கிடந்துள்ளன. அவைகளின் உள்ளே 5 முதல் 50 டொலர்கள் வரையிலான பணம் திணிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை கண்ணுற்ற அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது “அற்புதமான அறக்கட்டளை” எனப்படும் ஒரு உலகளாவிய நிறுவனத்தின் முன் முயற்சி என தெரியவந்துள்ளது.

இவர்கள் மாதந்தோறும் “மைக்ரோ மானியம்” எனப்படும் இத்திட்டத்தை வெவ்வேறு திட்டங்களிற்காக வழங்குகின்றனர்.

இப்பணத்தை பெறுபவர்கள் அதனை ஒரு செயலிற்காக உபயோகிப்பார்கள் என தாங்கள் நம்புவதாக அறங்காவலர் ஷான் வில்கி தெரிவித்தார்.

இவைகளை தாங்கள் வெளிப்படையான அல்லது மறைமுகமான இடங்களில் சென்று மறைத்து வைக்கப்போவதாகவும் இவற்றை கண்டு பிடிப்பவர்கள் சிலருக்கு உண்மையிலேயே சிறந்த சிலவற்றை செய்வார்கள்.

பணத்தை பெறுபவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அப்பணத்தை முன்நோக்கி செலுத்த முயல்வார்கள் என தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

சமூகம் தமக்கு வழங்கும் நன்கொடையை இந்த முயற்சிக்காக மாதந்தோறும் 1,000 டொலர்களாக விட்டு விடுவோம. இதன் மூலம் தங்கள் திட்டம் திரும்ப சமுதாயத்திற்கே இப்பணத்தை திரும்ப கொடுக்கின்றதெனவும் கூறினார்.

இத்திட்டத்தின் பிரகாரம் சனிக்கிழமை நோவ ஸ்கோசியாவின் அன்ரிகொநிஷ் ரவுனை சுற்றி பிரகாரமான இளஞ்சிவப்பு நிற கடித உறைகள் “Open Me” என்ற ஸ்டிக்கர்களுடன் சிந்தி விடப்பட்டிருந்தது.

இதற்குள் 5, 10 அல்லது 20டொலர்கள் தாள் காணப்படுவதுடன் இதனை முன்நோக்கி கொடுக்கவும் என்ற சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கும்.

TOTAL VIEWS : 684
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5grzo
  PLEASE ENTER CAPTA VALUE.