உலங்கு வானூர்தி விபத்தில் சவுதி இளவரசர் பலி
2017-11-06 16:31:49 | General

ஏமன் எல்லையில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் சவுதி நாட்டு இளவரசர் ஒருவர் பலியானார்.

மன்சூர் பின் முக்ரின் என்ற இளவரசரே விபத்தில் பலியானதாக சவுதி அரேபிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் சவுதி அரேபியாவின் தென் பிராந்திய உதவி ஆளுநராக கடமையாற்றியதாக சவுதி அரேபியர அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து இடம்பெற்றபோது இளவரசர் மன்சூர் பின் முக்ரின் உட்பட 8 அரச அதிகாரிகள் உலங்கு வானூர்தியில் பயணித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

TOTAL VIEWS : 93
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tm4pi
  PLEASE ENTER CAPTA VALUE.