அமெரிக்க இராஜதந்திரியை வெளியேற்றிய நியூஸிலாந்து
2017-03-20 17:45:58 | General

பொலிஸ் விசாரணையொன்றின் போது தனது தண்டனை விலக்கினை பயன்படுத்துவதில் இருந்து விலக வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நிராகரித்த அமெரிக்காவின் இராஜதந்திரியொருவர் நியூஸிலாந்தில் இருந்து  வெளியேற்றப்பட்டுள்ளார். 


மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்த விபத்தொன்றில் இந்த இராஜதந்திரி தொடர்புபட்டிருந்தார். அந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டுமென்று பொலிஸார் கோரியிருந்த நிலையில்,  தூதரக அதிகாரிகள் அதற்கு  அனுமதியளித்திருக்கவில்லை. 


அதனைத் தொடர்ந்து குறித்த இராஜதந்திரியை அங்கிருந்து நீக்கவேண்டுமென்று அமெரிக்க அரசிடம் நியூஸிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அந்த அதிகாரி சனிக்கிழமையன்று நாட்டைவிட்டு வெளியேறியதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விபரங்கள் எதனையும் வழங்கவில்லை. இதேவேளை, அமெரிக்க இராஜதந்திரி உடைந்த மூக்கு மற்றும் ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக நியூஸிலாந்து வானொலியொன்று அறிவித்துள்ளது. 


ஆனால், இந்த விசாரணையினை  தொடர்ந்து நடத்திவருவதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. நியூஸிலாந்தில் பணியாற்றிவரும் சகல இராஜதந்திரிகளுக்கும் குற்றச்சாட்டில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 1961 இல் கைச்சாத்திடப்பட்ட மியன்மார் சாசனத்திற்கு அமைவாக இந்தத் தண்டனை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


இருந்தபோதும் சகல இராஜதந்திர தூதரகங்களுக்கும் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சு வழங்கியிருக்கும் உத்தரவொன்றில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் நியூஸிலாந்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களென்று கூறப்பட்டுள்ளது. மிகவும் மோசமான குற்றச்செயல்கள் இடம்பெற்றிருந்தால், தண்டனை விலக்கில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாதென்று கூறப்பட்டுள்ளது. 


இதேநேரம், நியூஸிலாந்திற்கான தூதுவர் கடந்த ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் மீள அழைக்கப்பட்ட பின்னர் புதிய அமெரிக்க தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார். 


பி.பி.சி.

TOTAL VIEWS : 477
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vjz0c
  PLEASE ENTER CAPTA VALUE.