ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகார்ம் ஐ.நா சபை நாளை கூடுகிறது
2017-12-07 13:00:10 | General

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.

 

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த அறிவிப்புக்கு பாலத்தீனம்,சவுதி அரேபியா இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

டிரம்பின் அறிவிப்பு பல நாடுகளை சீர்குலைத்துள்ளது.பல அமெரிக்க நட்பு நாடுகளூம் கூட்டாளிகளும் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய முடிவை விமர்சித்துள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே டொனால்டு டிரம்ப்பின் இந்த முடிவை ஆதரிக்க வில்லை. அவர் கூறும் போது பிராந்தியத்தில் சமாதானத்திற்கான வாய்ப்பினைப் பொறுத்த வரையில் இது உதவாது என நாங்கள் நம்புகிறோம். இஸ்ரேலுக்கு பிரிட்டிஷ் தூதரகம் டெல் அவிவ் அடிப்படையிலானது மற்றும் அதை இடம் மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை என கூறி உள்ளார். "சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு இணங்க, கிழக்கு ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் பகுதியாக நாம் கருதுகிறோம். என கூறி உள்ளார்.

இந்த நிலையில் ஐநாசபையின் பாதுகாப்பு சபை நாளை கூட உள்ளது. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட எட்டு பேர் கலந்து கொள்வர். உலகளாவிய பிரச்சினைகளில் மிக நெருக்கமாக இருக்கும் இரு நிரந்தர உறுப்பினர்கள். பிற நிரந்தரம் அல்லாத உறுப்பினர்கள் சேர்ந்து பொலிவியா, எகிப்து, இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் உருகுவே ஆகியோர் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதிப்பர்.

கூட்டத்தில் ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ கெட்டரேஸ் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

முன்னதாக கெட்டரேஸ் கூறுகையில் ஜெருசலேம் இறுதி நிலைப்பாடு குறித்து நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

TOTAL VIEWS : 235
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n8rkr
  PLEASE ENTER CAPTA VALUE.