இந்தியாவில் காவல் பணியில் ரோபோ
2018-01-08 11:45:00 | General

இந்தியாவில் முதல்முறையாக தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடமாடும் ரோபோ பொலிஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஹெச்பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

தெலுங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர்  ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார்.

இது தொடா“பாக ரோபோவை கண்டுபிடித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேபட்டா வொஷனில் இந்த ரோபோ மனித உருவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது காவல் பணியை மேற்கொள்ளும். மனிதர்களை இனம் காணவும், புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும்.

ரோபோவில், கமரா, சென்சார்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. பொது இடங்களான விமான நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் இந்த வகை ரோபோக்களை பயன்படுத்தலாம்.

ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிரி கோணங்களிலும் திரும்பி என்ன நடக்கிறது என்பதனை காண முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே ஹைதராபாத்தில் தான் ரோபோ  பொலிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 131
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gtp9v
  PLEASE ENTER CAPTA VALUE.