மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம்
2017-11-06 15:36:02 | General

புதுடெல்லி: அமெரிக்காவின் ரெட்மாண்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஐதராபாதைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியாக 2014ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் எழுதியுள்ள ஹிட் ரெஃப்ரஷ் எனும் புத்தகம் சமீபத்தில் வெளியானது. ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முன்னுரை எழுதியுள்ளார்.

நவம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் டெல்லி மற்றும் ஐதராபாதில் நாதெள்ளா சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, அரசு அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் மாணவர்களை சந்திப்பது உள்ளிட்டவை அவரது பயண திட்டத்தில் அடங்கும்.

TOTAL VIEWS : 589
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f9gzw
  PLEASE ENTER CAPTA VALUE.