உலகின் முதல் பிரமிடு கண்டுபிடிப்பு?
2016-08-16 12:54:15 | General

உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது கஸகஸ்தான் நாட்டில் தான் என்ற புதுத் தகவலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.

இதுவரை எகிப்தின் Djoser பிரமிடுதான் உலகின் முதல் பிரமிடு என ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர். ஆனால் எகிப்தின் கெய்ரோவில் இருந்து 3,900 மைல்கள் வடகிழக்கில் அமைந்துள்ள Saryarke நகரில் இந்த புதிய பிரமிடை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரமிடானது எகிப்தில் அமைந்துள்ள Djoserஐ விட 1000 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிடானது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இதுகுறித்து உறுதியான தகவல்களை தொகுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அதை மிக ரகசியமாக பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது வெறும் கற்குவியலாக காட்சி தரும் இந்த பிரமிடின் தோற்றமும் இதுவரை உலகின் முதல் பிரமிடு என கருதி வந்த எகிப்தின் Djoser பிரமிடு போலவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

புதிதாய் கண்டுபிடித்துள்ள பிரமிடு குறித்த ஆய்வுகள் இன்னும் முடிவடைவில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இந்த பிரமிடானது 27 அடுக்குகளுடன் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர். மட்டுமின்றி 5 நிலைகள் வரை கற்களால் உருவாக்கப்பட்டுள்ள படிகளும் இதில் காணப்பட்டன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Djoser பிரமிடானது 2700 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 2082
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xuny3
  PLEASE ENTER CAPTA VALUE.