உலகளாவிய இணையத்தள ஊடுருவலில் வடகொரியா?
2017-05-16 15:48:41 | General

உலகளாவிய ரீதியில் அண்மையில் நடத்தப்பட்டிருந்த  இணையத்தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மேலெழுந்திருக்கும் நிலையில் பெரும்பாலான தரப்பினரும் வட கொரியாவை சந்தேகிக்கும் நிலை காணப்படுகிறது.


லாசரஸ் குழு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

சொனி பிக்ஸஸ் நிறுவனத்தினை 2014 இல் இணையத்தளம் மூலமாக தாக்கியிருந்தனர். அதேபோல 2016 இல் பங்களாதேஷ் வங்கி ஒன்று தாக்கப்பட்டிருந்தது.


இந்த இரண்டு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை எம்மால் அனுமானிக்க முடிகின்றது.


லாசரஸ் குழு சீனாவை தளமாகக் கொண்டு செயற்படுவதாக  பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் இந்தக் குழு வட கொரியாவின் பின்புலத்தில் வட கொரியாவுக்கு சார்பாக அல்லது வட கொரியாவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகின்றது என்பதே உண்மை.


கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் நீல்மேதா  இந்த இணையத்தளத் தாக்குதலை அடையாளம் கண்டிருந்ததுடன் தற்பொழுது  லாசரஸ் குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள்  கருதுகின்றனர்.


வன்னாக்கிரை இணையத் தாக்குதல் சம்பந்தமான குறியீடுகள் மற்றும் ஏனைய வடிவங்களை ஒப்பிடும் போது இந்த இணையத்தள தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட படிமுறைகளும் லாசரஸ் நிறுவனத்தின் இணையத்தள தாக்குதல் வடிவத்தை ஒத்திருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.


இணையத்தளங்களை ஊடுருவுவதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப உபகரணங்கள் லாசரஸ் குழுவினரால் கடந்த வருடம் பயன்படுத்தப்பட்டிருந்தன.


இவ்வாறான நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு பாரிய இணையத்தளத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் அலன் குட்வாட்  இந்த விடயம் தொடர்பான சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.


வன்னாகிரை (Wannacry) நிறுவனத்தின் குறியீடுகளும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட நேர வலையமும் சீனாவை தளமாகக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.


அதேபோல் கப்பம் கோரும் வசனத் தொடரும் லாசரஸ் குழுவினரின் பிரயோகத்தினை ஒத்ததாக  காணப்படுகின்றது.


இவ்வாறான நிலையில் இந்த தாக்குதலானது குறித்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


பி.பி.சி.

TOTAL VIEWS : 1193
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0orva
  PLEASE ENTER CAPTA VALUE.