ஐபோன்களில் 'ஐ' அர்த்தம் என்னெனு தெரியுமா?
2016-07-29 13:27:33 | General

ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாத கருவியாக உருமாறியுள்ளது. அழைப்புகளை மேற்கொண்டு தொலைவில் இருப்பவரைத் தொடர்பு கொள்வதோடு, பொழுதுபோக்க உதவும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் கருவிகளில் உலகளவு பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஐபோன் மற்ற கருவிகளை விட விலை அதிகமாக இருந்தாலும் பலர் இந்தக் கருவியை இன்றும் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இவ்வளவு பிரபலமான ஐபோன் கருவிகளில் 'ஐ' என்பதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

அனைவரையும் கவரும் அழகு, புத்தம் புது அம்சங்கள் மற்றும் சிறந்த வன்பொருள் போன்றவை ஆப்பிள் கருவிகளை மக்கள் விரும்பும் காரணங்கள் ஆகும்.

ஆப்பிள் நிறுவனமானது ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்நியாக் மற்றும் ரோனால்டு வெயின் இணைந்து ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இன்று ஒட்டு மொத்த உலகமும் ஆப்பிள் பிரான்டின் ஐபோன், ஐபேட், ஐபாட், ஐடியூன்ஸ் போன்ற சேவைகளுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கின்றது. மேலும் இவை நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கருவிகளாகவும் இருக்கின்றது.

1998 ஆம் ஆண்டு ஐமேக் கருவி வெளியிடப்பட்டது. அன்று முதல் பெரும்பாலான ஆப்பிள் கருவிகளில் 'ஐ' முன்வைக்கப்பட்டது. ஆனால் இதன் உண்மை அர்த்தம் என்ன?

போன் என்ற வார்த்தைக்கு முன் ஐ என்ற வார்த்தை சேர்க்கப்பட உண்மையான காரணம் என்னவாக இருக்கும் எனப் பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

ஐபோன் பெயரில் பயன்படுத்தப்படும் ஐ என்ற வார்த்தைக்கான அர்த்தம் இண்டர்நெட் ஆகும். இத்தகவலை ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்தார்.

ஆப்பிள் கருவியின் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் ஸ்டீவ் ஜாப்ஸ் இதனைத் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டு இண்டர்நெட் யுகத்தின் துவக்கமாகவும் ஐமேக் கருவிகள் வேகமான இண்டர்நெட் பயன்பாடு வழங்கப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது.

மாக்கின்டோஷ் எளிமை மற்றும் இண்டர்நெட் உற்சாகத்துடன் ஐமேக் கருவிகள் வருகின்றன என ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்துள்ளார். எளிய நடையில் வேகமான இண்டர்நெட் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு ஐமேக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வெறும் இண்டர்நெட் என்பதை தாண்டி 'ஐ' என்ற வார்த்தை தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவற்றையும் அர்த்தமாகக் கொண்டுள்ளதாக ஸ்டீவ் தெரிவித்தார்.

பெரும்பாலான கருவிகளில் ஐ பயன்படுத்தப்பட்டாலும் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற கருவிகளில் ஐ பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 2085
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9pcjb
  PLEASE ENTER CAPTA VALUE.