வேற்றுக்கிரகவாசிகள் தேடலுக்கான உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி சீனாவில் செயல்படத் தொடங்கியது
2016-09-26 15:49:33 | General

பெய்ஜிங்: வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தேடுதலை முடுக்கிவிடவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தை புரிந்து கொள்ளவும் 30 கால்பந்தாட்ட மைதான அளவில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த தொலைநோக்கி   செயல்படத் தொடங்கியது.


விண்வெளியில் இருந்து மர்மமான முறையில் பல ஒலிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதை வேற்றுக்கிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. அந்த ஒலிகளை மொழி மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.


அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகள் குறித்த தேடலில் சீனவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள நட்சத்திர தொகுதிகளில் ஒளிக்கு பின்னால் கிரகங்கள் இருக்கின்றனவா? அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 2011 இல் உலகின் மிகப்பெரிய தொலை 
நோக்கியை உருவாக்கும் பணியை சீனா தொடங்கியது.

குய்சோ மாகாணத்தில், பிங்டாங் பகுதியில் உள்ள மலைசூழ்ந்த கர்ஸ்ட் பள்ளத் தாக்கு பகுதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது. மேலும் வானியல் அதிசயங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் பள்ளத்தாக்கு அருகே 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த 8,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து 30 கால்பந்தாட்ட மைதான அளவில் 4,450 பிரதிபலிப்பான் (ரிப்ளெக்டர்) பேனல்கள் பதித்த உலகின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் பூமிக்கு அப்பால் வாழும் வேற்றுக்கிரகவாசிகளின் குரலையும், பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என சீன விஞ் ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபா மதிப்பில் உருவான இந்த தொலைநோக்கிக்கு 500 மீற்றர் அபர்ச்சர் ஸ்பெரிக்கல் டெலஸ்கோப் (பாஸ்ட்) என பெயரிடப்பட்டுள்ளது.


தி இந்து

 

TOTAL VIEWS : 893
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
aw1np
  PLEASE ENTER CAPTA VALUE.