போர்த்துக்கல் பாலைவனத்தில் மர்ம உயிரினம்; ஏலியனா?
2016-08-19 12:18:38 | General

போர்த்துக்கல் பாலைவனத்தில் மர்ம உயிரினம் ஒன்று தென்பட்டுள்ளது. அது ஏலியன் என்று சொல்லப்படும் வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் உண்மையில் இருக்கிறார்கள் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான வெளியீடும் வந்ததில்லை. அ

மெரிக்காவில் ஏரியா 51 என்று சொல்லக்கூடிய பகுதியில் மட்டும் ஏலியன்கள் தென்படுவதாக ஏராளமான செய்திகள் எப்போதும் வந்து கொண்டிருக்கும்.
 
அந்த பகுதியை வேற்று கிரகவாசிகள் வந்து செல்லும் பகுதியாகவே அனைவரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் போர்த்துக்கல் பாலைவனத்தில் மனிதன் போன்று உருவம் உள்ள மர்ம உயிரினம் ஒன்று நடந்து செல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
 
இது வேற்றுகிரகவாசிதான் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். போர்த்துக்கல் மெடிரா தீவில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த காட்சி பதிவு செய்யப்பட்ட இடம் எது என்று சரியான தகவல் கிடைக்கவில்லை.

TOTAL VIEWS : 1619
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xh2os
  PLEASE ENTER CAPTA VALUE.