ஹத்துரு இல்லாமல் களமிறங்கும் பங்களாதேஷ்
2018-01-03 11:19:27 | General

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுடன் விளையாடவுள்ள முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் அணி தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கவுள்ளது.

பங்களாதேஷ் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு தொடர் பங்களாதேஷில் 15 ஆம் திகதி தொடங்குகிறது.

இதில் இலங்கை அணி 17 ஆம் திகதி சிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்க கடந்த நவம்பர் மாதம் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இன்னும் பங்களாதேஷ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை.

ஹத்துருசிங்க விலகியமை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுளது.
இத்தொடருககு முன் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கூறுகையில்;

தற்போது தலைமைப் பயிற்சியாளர் தெரிவு செய்யப்படவில்லை. நடக்கவுள்ள முத்தரப்பு தொடரில் பங்களாதேஷ் அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் தான் விளையாடும். அணிக்கு துணைப் பயிற்சியாளராக உள்ளவர் பயிற்சியளிப்பார்.

அதுமட்டுமன்றி பங்களாதேஷ் அணியில் சகிப் அல் ஹசன், மோர்டசா போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் இந்தத் தொடருக்கு உதவுவர் என்று தெரிவித்துள்ளது. 

 

TOTAL VIEWS : 169
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
a1mfi
  PLEASE ENTER CAPTA VALUE.