இலங்கையை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு அபராதம்
2017-06-14 09:09:41 | General

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நேற்று  முன்தினம் இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சம்பியன்ஸ் கிண்ண  50 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான்  இலங்கை அணிகள் மோதின. இந்த   போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால்  வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணியினரும்  விளையாடினார்கள். 


முதலில் களமிறங்கி ஆடிய  இலங்கை அணி, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவரில் 236   ஓட்டங்கள் எடுத்து   ஆட்டமிழந்தது.        


முக்கியமான போட்டி என்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நிதானமாக யோசித்து கச்சிதமாக பந்து வீசினார்கள். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் பந்து வீசி முடிக்க முடியவில்லை. 


இதனால் பாகிஸ்தான் அணியின் கப்டனுக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 வீதம் அபராதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு, இதுபோல் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்   மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணியின் கப்டனாக செயல்பட்ட உபுல் தரங்கா இரண்டு போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டதும் தெரிந்ததே.

TOTAL VIEWS : 541
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
w1pwv
  PLEASE ENTER CAPTA VALUE.