சங்கா, மஹேல வரிசையில் திமுத்
2017-10-10 11:04:15 | General

டெஸ்ட் போட்டிகளில் 3,000 ஓட்டங்களைக் கடந்த 12 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையை திமுத் கருணாரத்ன பெற்றுள்ளார்.


இலங்கை  பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் இலங்கை வீரர் கருணாரத்ன 196 ஓட்டங்கள் குவித்தார்.


141 ஓட்டங்களை எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 3,000 ஓட்டங்களை குவித்த 12 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையை கருணாரத்ன பெற்றார். 44 போட்டிகளில் இதை அவர் செய்துள்ளார்.


இதற்கு முன்னர் குமார் சங்ககார, மஹேல ஜெய உள்ளிட்ட ஜாம்பவான்கள் இதை செய்துள்ளனர்.


இலங்கை அணியை பொறுத்தவரையில் சங்ககார 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

TOTAL VIEWS : 160
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5hhnn
  PLEASE ENTER CAPTA VALUE.