தினேஷ் சந்திமால் சாதனை
2017-12-05 12:03:54 | Leftinraj

புதுடில்லியில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ரெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்வாண்டு இடம்பெற்ற ரெஸ்ட் போட்டிகளில் மூன்று தடவைகள் 300ற்கு மேலான பந்துவீச்சுக்களை எதிர்கொண்ட முதலாவது துடுப்பாட்ட வீரர் என்றபெருமை சந்திமாலுக்குக் கிடைத்துள்ளது.

நேற்றைய ஆட்ட முடிவில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இனிங்சில் 9 விக்கட் இழப்பிற்கு 356 ஓட்டங்களை எடுத்திருந்தது. தினேஷ் சந்திமால் 341 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 147 ஓட்டங்களை எடுத்திருந்தார். இது சந்திமால் பெற்ற பத்தாவது சதமாகும். முதல் இனிங்சில் இந்தியா இலங்கையைவிட 180 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது

TOTAL VIEWS : 149
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ksb4n
  PLEASE ENTER CAPTA VALUE.