இங்கிலாந்திடம் மீண்டும் தோற்றது தென் ஆபிரிக்க அணி
2017-08-08 16:27:32 | General

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆபிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.  முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி தொடரில் 21 என முன்னிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது.


முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 362, தென் ஆபிரிக்கா 226 ஓட்டங்கள் எடுத்தன. மூன்றாவது நாள்  முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இனிங்ஸில் 224/8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. புரோட்(5),    அன்டர்சன் (2) அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இனிங்சில் 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.


கடின இலக்கு :  இரண்டாவது இனிங்ஸில் 380 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென் ஆபிரிக்க அணியை எல்கர் (5),  பவுமா (12), குயின்டன் டிகொக் (1), கைவிட்டனர். அம்லா (83), கப்டன் டுபிளசிஸ் (61),  அரைச்சதம் அடித்த போதும் இங்கிலாந்து வெற்றியை தடுக்க முடியவில்லை.


ரபடா(1), மோர்கல் ஒலிவர் டக் அவுட்டாக தென் ஆபிரிக்க அணி இரண்டாவது இனிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மொயின் அலி 5 அண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினர். 177 ஓட்டங்கள் வித்தியாலத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 31 என்று தொடரை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 

TOTAL VIEWS : 239
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
8aird
  PLEASE ENTER CAPTA VALUE.