இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு
2017-06-05 17:23:03 | General

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் இலங்கை அணியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


லண்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். 


 இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பிற்கு சிக்கல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அணி மற்றும் ஏனைய அணிகளுக்கு எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

TOTAL VIEWS : 160
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gxk8j
  PLEASE ENTER CAPTA VALUE.