ஐ.பி.எல்.லில் ஆட அனுமதி
2018-01-03 11:29:37 | General

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஐ.பி.எல். ஏலத்தில் கலந்துகொள்ள இங்கிலாந்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

எனினும் விசாரணை நிலுவையில் உள்ளதால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணயில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐ.பி.எல். தொடரில் கலந்துகொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் பென் ஸ்டோக்ஸை ரைசிங் புனே வாரியர்ஸ் அணி 14 கோடி ரூபா கொடுத்து வாங்கியிருந்தது. சிறப்பாக விளையாடி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பென் ஸ்டோக்ஸ் இறுதிப் போட்டியில விளையாடாமல் சொந்த நாடு திரும்பினார்.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஐ.பி.எல். தொடர் 2018 இல் முழுவதும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

TOTAL VIEWS : 167
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
jh9xb
  PLEASE ENTER CAPTA VALUE.