ஆஷஸ்; ஆஸி. அணி வெற்றி
2017-11-28 12:23:40 | General

இங்கிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 302 அவுஸ்திரேலியா 328 ஓட்டங்கள் எடுத்தன.

இரண்டாவது இனிங்ஸில் இங்கிலாந்து அணி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2 ஆவது இனிங்ஸை தொடக்கிய அவுஸ்திரேலிய அணி 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வார்னர் (60), பான்கிராப்ட் (51) ஆட்டமிழக்கமலிருந்தனர்.

நேற்று திங்கட்கிழமை கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அவுஸ்திரேலியாவின் வார்னர் பான்கிராப்ட் ஜோடி அபாரமாக ஆடியது. கிறிஸ் வோக்ஸ் பந்தில் 3 பவுண்டரி அடித்த பான்கிராப்ட் வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர் (87,) பான்கிராப்ட் (82) ஆட்டமிழக்கõமலிருந்தனர். ஆட்டநாயகன் விருதை அவுஸ்திரேலிய கப்டன் ஸ்ரீவ் ஸ்மித் வென்றார்.

இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 10 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.2 இல் அடிலெய்டில்  தொடங்குகிறது. 

TOTAL VIEWS : 61
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dqb4v
  PLEASE ENTER CAPTA VALUE.