இந்திய இன்னிங்ஸால் வெற்றி
2017-08-06 15:28:29 | General

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கொழும்புவில் கடந்த 3ம் திகதி தொடங்கியது.

முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்குள் சுருண்டு, பாலோ ஆன் ஆனது.

439 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினர்.

உபுல் தரங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின் கருணாரத்னேவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

TOTAL VIEWS : 170
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0ctba
  PLEASE ENTER CAPTA VALUE.