ஒருநாள் தொடரில் அமீர் இல்லை
2017-10-09 16:19:51 | General

வலது பக்க தாடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து மொகமது அமீர் விலகியுள்ளார்.


பாகிஸ்தான்  இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பகல்  இரவு ஆட்டமாக டுபாயில் நடைபெற்று வருகிறது.


கடந்த சனிக்கிழமை 2 ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமீர் களத்தடுப்பு செய்யும்போது வலது தாடையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கான் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது வலது பக்க தாடையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.


இதன் காரணமாக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


இந்தப் போட்டியில் மொகமது அமீர் 16.3 ஓவர்கள் மட்டுமே வீசினார். 2 ஆவது நாளில் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.

TOTAL VIEWS : 145
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1ukhs
  PLEASE ENTER CAPTA VALUE.