பார்சிலோனாவின் வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட்
2016-12-05 16:47:55 | General

ரியல் மாட்ரிட் அணியின் கப்டன் செர்ஜியோ ரமோஸ் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்தார். இதன் மூலம் இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


“எல்கிளாசிகோ” என்றழைக்கப்படும் பரம எதிரிகளான பார்சிலோனா  ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று முன்தினம் ஸ்பெயினில் கேம்ப் நவு மைதானத்தில் “லா லிகா” லீக் போட்டியில் மோதின. இந்தப் போட்டியை நேரில் பார்க்க 98,485 இரசிகர்கள் வந்திருந்தனர்.


போட்டியின் இரண்டாவது பாதியின் 53 ஆவது நிமிடத்தில் பாரிசிலோனா சார்பில் சுவாரஸ் கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்ததன் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது.


இதனை அடுத்து இரண்டாம் பாதியின் 90 ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் தலைவர் செர்ஜியோர ரமோஸ் கோலடித்து சமப்படுத்தினார்.


இந்த நிலையில் இந்த போட்டி 1 1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தது.


இதையடுத்து ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையுடன் “லா லிகா” புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

TOTAL VIEWS : 1003
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
k5mqm
  PLEASE ENTER CAPTA VALUE.