மினி ஐ.பி.எல்.க்கு ஏற்பாடு
2017-06-30 15:50:18 | General

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மினி ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இது குறித்து ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா பேட்டியளித்துள்ளார்.


ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா அளித்துள்ள பேட்டியில் மினி ஐ.பி.எல். தொடரை வெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருத்தமான இடமாக தோன்றுவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் உலகளவில் ஐ.பி.எல். தொடருக்கு பெரும் வரவேற்பு இருப்பதாக கூறிய சுக்லா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார்.


கடந்தாண்டும் இதேபோல மினி ஐ.பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் திட்டத்தை பி.சி.சி.ஐ. கடைசி நேரத்தில் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 73
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gag2e
  PLEASE ENTER CAPTA VALUE.