கண்டியில் களமிறங்குவாரா குல்தீப்?
2017-08-11 10:23:42 | General

எனது கடினமான முயற்சிக்கு கட்டாயம் பலன் கிடைக்கும். இலங்கைக்கு எதிராக கண்டியில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் இடம்பெற முடியும் என நம்புகிறேன் என குல்தீப் யாதவ் தெரிவித்தார். 


மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் இரு டெஸ்டில் வென்ற இந்திய அணி தொடரை 2 0 என வென்றது. 


இதற்கான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜாவுக்கு அடுத்து மூன்றாவது சுழல் வீரராக இடம்பெற்றவர் சைனாமேன் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (22 வயது). தற்போது தடை காரணமாக ஜடேஜா விளையாட முடியாததால் கண்டியில் (பல்லேகலை) நடக்கும் மூன்றாவது டெஸ்டில் குல்தீப் இடம்பெறுவார் என நம்பப்பட்டது.

ஆனால், சற்றும் எதிர்பாராமல் தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்ற மற்றொரு சுழல் வீரர் அக்சர் படேல் அழைக்கப்பட்டுள்ளார். 
 இது குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது  ; முதன் முதலாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக டெஸ்டில் (தரம்சாலா) வாய்ப்பு பெற்றபோது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது மீண்டும் அதுபோல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன். 


ஏனெனில், இது எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இருக்கும். ஒருபுறம் இப்படி எதிர்பார்ப்பு இருந்தாலும் சிறப்பாக செயற்பட வேண்டுமென மற்றொரு புறம் ஒருவித பதற்றமும் உள்ளது. இருப்பினும் விளையாடும் அணியில் இடம் கிடைக்குமா என உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில், போட்டி தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ளன என்றார்.

TOTAL VIEWS : 309
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kfdy2
  PLEASE ENTER CAPTA VALUE.