இலங்கை வீரர் தனுஸ்கவுக்கு 6 போட்டித் தடை
2017-10-06 11:38:48 | General

இலங்கை அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் விதிகளை மீறி செயற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை கிரிக்கெட்டின் ஒழுங்காற்றுக் குழு, விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 


இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதன்படி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் தனுஸ்க குணதிலக்க அணியில் சேர்க்கப்படவில்லை.

TOTAL VIEWS : 222
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ko8vc
  PLEASE ENTER CAPTA VALUE.