ஆஸி. வீரர்களின் மெளனத்திற்கு காரணம் என்ன?
2017-10-06 11:41:23 | General

"ஐ.பி.எல். ஏலம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய வீரர்கள் வார்த்தைப் போரில் ஈடுபடாமல் மௌனம் காத்தனர்' என முன்னாள் இந்திய தொடக்க வீரர் சேவாக் தெரிவித்தார்.


இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள், மூன்று சர்வதேச "ருவென்ரி 20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 41 எனக் கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.


முதல் "ருவென்ரி  20' போட்டி நாளை, 7 ஆம் திகதி ராஞ்சியில் நடக்கவுள்ளது. இந்தியஅவுஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகளில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே வார்த்தை மோதல் உண்டான சம்பவம் நிறைய உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, இரு அணிகளின் கப்டன்களான ஸ்ரீவ் ஸ்மித், விராட் கோஹ்லி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவ்வித வார்த்தை மோதலிலும் ஈடுபடவில்லை.


இது குறித்து இந்திய வீரர் சேவாக் கூறியது; அடுத்த ஆண்டு 11 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் நடக்கவுள்ளது. இதன் காரணமாக, சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரில், இந்திய வீரர்களுடன் வாக்குவாதம் செய்ய அவுஸ்திரேலிய அணியினர் தயங்கினர்.


ஒருவேளை வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்தால், இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் யோசிப்பர். இதுவே அவுஸ்திரேலிய வீரர்களின் மௌனத்திற்கு காரணமெனவும் தெரிவித்தார்.

 

TOTAL VIEWS : 246
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vaxf2
  PLEASE ENTER CAPTA VALUE.