பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி
2017-10-06 11:34:13 | General

இலங்கை  பாகிஸ்தான் அணிகளிடையே இன்று டுபாயில் ஆரம்பமாகவுள்ள பகலிரவுப் போட்டியாக நடைபெறும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியில் இருக்கின்றது.


2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை  பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. இதில் அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இறுதி நேரப் போராட்டத்தில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 10 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது.


இன்று ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற ரீதியில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. வழமை போலன்றி இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கும் புதியதொரு அனுபவமாகும். 


2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறாத நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 5 இல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 4 இல் வெற்றி தோல்வியின்றி முடிந்ததுடன் , இதுவரை எந்தத் தொடரிலும் தோல்வியை சந்திக்கவில்லை.


இந்த நிலையில் முன்னணி வீரர்களான மிஸ்பா உல்ஹக் மற்றும் யூனிஸ்கான் ஆகியோர் இல்லாது முதல் தடவையாக களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி இலங்கையுடன் நடைபெறும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்ற மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது.


கடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் பாகிஸ்தான் அணியால் 2 ஆவது இனிங்ஸில் மிகக் குறைந்த 136 ஓட்டம் என்ற இலக்கை அடைய முடியாது 114 ஓட்டங்களையே பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.


இந்தநிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள 2 ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டுமென்ற நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

 

TOTAL VIEWS : 281
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
p7iji
  PLEASE ENTER CAPTA VALUE.