இலங்கை அணியில் பாரிய மாற்றங்கள்
2017-08-08 16:19:23 | General

இந்திய அணியுடனான  படுதோல்விகளை அடுத்து இலங்கை அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை, இலங்கை அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில்  மிக முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


இலங்கை அணி கப்டன், அணி பயிற்சியாளர், அணி நிர்வாகிகள்  கலந்துகொண்ட இந்த சந்திப்பில் இலங்கை அணி  தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவது தொடர்பாக  கவலை தெரிவிக்கப்பட்டதுடன்,  இந்தியாவுடனான  இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி  மோசமான தோல்வியை சந்தித்தது குறித்தும்  விமர்சிக்கப்பட்டது.


பல்வேறு மாற்றங்களை அணியில் மேற்கொண்ட போதிலும்  போதிய பலன் கிடைக்கவில்லை எனவும் முதல் இரு போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட அணி குறித்து  பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதால் தேர்வுக்குழுவின் செயற்பாடு குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.


 இலங்கை மண்ணில் இந்திய அணி இலங்கையை படுதோல்வியடையச் செய்ததால்  அணி மீதான விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ள நிலையில்,  அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு தொடர்பாகவும் இதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய  அவசியங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாகவும் அணி நிர்வாகம் மீது  சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு  பதில் அளிக்க வேண்டிய நிலையில் நிர்வாகம் இருப்பதால் அணியில்  மேலும் மாற்றங்களை செய்வது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

TOTAL VIEWS : 146
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vq9fp
  PLEASE ENTER CAPTA VALUE.