"இலங்கை வீரர்களிடம் திறமை உண்டு; நம்பிக்கை தான் இல்லை"
2017-11-10 10:26:33 | General

இலங்கை அணியிடம் நல்ல திறமை இருப்பதாகவும் ஆனால் நம்பிக்கை இல்லாதிருப்பதாகவும் தெரிவித்துள்ள இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளரான திலான் சமரவீர, இலங்கை வீரர்கள் ஒருமித்து நம்பிக்கையுடன் விளையாடினால் வெற்றி கிட்டுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.


இலங்கை அணி அண்மைக்காலமாக  தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அணிக்கு  புதிய பயிற்சியாளர்களை சேர்க்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. புதிய தலைமை பயிற்சியாளர் தெரிவு நடைபெறவுள்ள நிலையில் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் வீரர் திலான் சமரவீர இணைக்கப்பட்டுள்ளார்.


அடுத்த ஓரிரு தினங்களில் இந்தியா செல்லவுள்ள இவர் இந்தியாவுடனான மூன்று வகை போட்டி தொடர் குறித்து கூறுகையில்; 


இந்தியாவுடனான தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த சவாலை ஏற்றுக் கொள்வதற்குரிய தருணம் இதுதான்.  இலங்கை அணி  தொடர்ந்தும் தடுமாறி வருகின்றது.  ஆனாலும், இந்த நிலையை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.


இலங்கை அணியில் பல திறமை மிக்க இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களால் சாதிக்க முடியும். ஆனால், இலங்கை வீரர்களிடம் நம்பிக்கையில்லாதிருப்பது தற்போதைய தோல்விகளுக்கு பிரதான காரணமாகும். 


சிறந்ததொரு திட்டத்தை உருவாக்கி அதனை முன்னெடுப்போமானால் இலங்கை அணியால் இந்திய தொடரில் சாதிக்க முடியும். அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானது. இலங்கை வீரர்களுடன் பேசி அவர்களது திறமையை மேம்படுத்தி இந்திய தொடரில்  சாதிக்க முற்படுவோம்.


துடுப்பாட்டத்தில் இலங்கை வீரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் திறமையை சற்று மெருகூட்டினாலே இவர்களால் பெரிதும் சாதிக்க முடியும். அதற்கு என்னாலான  அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

TOTAL VIEWS : 170
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
plv1m
  PLEASE ENTER CAPTA VALUE.