மலிங்க ஓரம் கட்டப்பட இதுதான் காரணமா?
2018-01-02 11:26:59 | General

இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சரை விமர்சனம் செய்தது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் தனது ஓய்விற்கான காரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மலிங்க கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தில் விளையாட ஆசைப்படுகிறேன். அதில் நான் இடம்பெற்றால் அதுவே எனது கடைசித் தொடராக இருக்கும்.

கடந்த 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளேன். எனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த வருடம் தான் நான் அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை.
இருப்பினும் எனது பந்துவீச்சின் போர்ம் பற்றி யாரேனும் என்னிடம் கேட்டால், நான் அதற்கான விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.


இலங்கை அணி வீரர்களின் உடல் தகுதியை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர விமர்சித்திருந்தார். இதற்கு மலிங்க, நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் பற்றி கவலையில்லை. குரங்குக்கு கிளியின் கூடு பற்றி என்ன தெரியும்?

கிளியின் கூட்டுக்குள் சென்ற குரங்கு அதைப் பற்றி பேசுவது போல் உள்ளது என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத் துறை அமைச்சரை மலிங்க "குரங்கு' என்று விமர்சனம் செய்ததால் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 

TOTAL VIEWS : 87
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ty3cu
  PLEASE ENTER CAPTA VALUE.