முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து பாகிஸ்தான் பலப்பரீட்சை
2017-06-14 09:06:20 | General

சம்பியன்ஸ்  கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து  பாகிஸ்தான் அணிகள்   இன்று புதன்கிழமை மோதுகின்றன.


8ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. "ஏ' பிரிவில் இங்கிலாந்து, பங்களாதேஷûம்  "பி' பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறின.


கார்ப்பில் நடக்கும் முதல் ஆட்டத்தில் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்தும்    "பி' பிரிவில் 2ஆம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன.


இங்கிலாந்து "லீக்' ஆட்டத்தில் தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் கப்டன் மோர்கன், ஜோரூட், ஹால்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொய்ன்அலி, மார்க்வுட், பிளுங்கெட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.


 அந்த அணி துடுப்பாட்டம் , பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகிறது.


அந்த அணி 3 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே 2004, 2013 ஆம் ஆண்டு தகுதி பெற்றிருந்தது. ஆனால் 2 முறையும்  கிண்ணத்தை இழந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு நுழைந்து கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் உள்ளது.


சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி "லீக்' ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. அதன்பின் எழுச்சி பெற்று தென்னாபிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.


பாகிஸ்தான் அணி  துடுப்பாட்டத்தை விட பந்துவீச்சிலேயே 
சிறந்து காணப்படுகிறது. கணிக்க முடியாத அணி என்று வர்ணிக்கப்படும் அந்த அணி அதற்கு ஏற்றால்போல் தென்னாபிரிக்கா, இலங்கையை வீழ்த்தியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. 


பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கும் முனைப்பில் உள்ளது. இதுவரை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிடையாது. 3 முறை அரையிறுதி வரை வந்துள்ளது.

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.  இப்போட்டி  இலங்கை நேரப்படி  இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. 

 

TOTAL VIEWS : 316
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ii0ih
  PLEASE ENTER CAPTA VALUE.