3 வீராங்கனைகளிடம் தங்கப் பதக்கம் பறிமுதல்
2016-10-28 13:39:57 | General

லண்டன் ஒலிம்பிக்கில் வென்று ஊக்கமருந்தில் சிக்கிய 3 கஜகஸ்தான் வீராங்கனைகளின் தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


சமீபத்தில் ரஷ்ய வீரர் வீராங்கனைகள் மீது எழுந்த ஊக்கமருந்து குற்றச்சாட்டை தொடர்ந்து 2008  ஆம் ஆண்டு (பீஜிங்) மற்றும் 2012 ஆம் ஆண்டு (லண்டன்) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்வீராங்கனைகளிடம் இருந்து எடுத்து சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரத்த மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. 


இதில் 98 பேரின் மாதிரிகள் மறுபரிசோதனையில் தோல்வியை சந்தித்துள்ளன. அதாவது அவர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பதக்கம் வென்றவர்களும் அடங்குவார்கள்.

ஊக்கமருந்து மறுபரிசோதனையில் ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பளுதூக்குதல், மல்யுத்தம், தடகள வீரர்  வீராங்கனைகள் அதிகளவில் சிக்கியிருக்கிறார்கள். 


ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தி சர்வதேச ஒலிம்பிக் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனைகள் சுல்ப்யா சின்ஷான்லோ (53 கிலோ), மையா மானெஜா (63 கிலோ), ஸ்வெட்லானா (75 கிலோ) ஆகியோரின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 


லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 பேர் உட்பட 9 வீரர், வீராங்கனைகள் முன் திகதியிட்டு தகுதி இழந்தவர்களாக சர்வதேச ஒலிம்பிக்   சபை அறிவித்துள்ளது. 

 

TOTAL VIEWS : 395
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
iou5e
  PLEASE ENTER CAPTA VALUE.