இலங்கையிடம் தோற்றது ஏன்?
2017-10-04 10:27:45 | General

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் தான் இலங்கையிடம் தோற்றதாக பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.


இலங்கை  பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை கூட எட்டமுடியாமல் பாகிஸ்தான் 114 ஓட்டங்களுக்கு இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழந்தது.


தோல்விக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று சரியாக விளையாடாமல் போனதே தோல்விக்கு காரணம்.

இரண்டாவது இனிங்ஸில் ஒரு வீரராவது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர்களின் மோசமான செயற்பாடுகள் குறித்து ஆலோசிப்போம்.


ஆசாத் ஷபிக் சிறந்த வீரர் ஆவார். அவர் சதம் அடித்திருக்க வேண்டுமென தான் நினைத்ததாகவும் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். 

TOTAL VIEWS : 226
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dz0mu
  PLEASE ENTER CAPTA VALUE.