முல்லை மாணவிகள் சாதனை
2017-07-06 15:45:04 | General

மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையேயான 2017 ஆம் ஆண்டுக்கான பளு தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் ஐந்து தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாம் நிலைக்கு தெரிவாகியுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் காணப்படுகின்றது.


இந்தப் போட்டிகளில் 16 வயதுப் பிரிவில் ப.தர்சனா, தே.தர்சிகா ஆகியோர் முதலாம் இடத்தினையும், அ.ஸ்ரன்சிகா 2 ஆம் இடத்தினையும், இ.ஜீவிதா, சி.மேனகா ஆகியோர் 3 ஆம் இடத்தையும் மற்றும் கா.லுகேந்தினி 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


மேலும் 18 வயதுப் பிரிவில் ர.லக்சனா, ஞா.நிரூசா ஆகியோர் முதலாம் இடத்தினையும் 20 வயதுப் பிரிவில் ஜெ.நிதுசா 2 ஆம் இடத்தினையும், ம.கஜனி முதலாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

TOTAL VIEWS : 263
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kekz9
  PLEASE ENTER CAPTA VALUE.