கடைசிப்பந்தில் இலங்கை வெற்றி
2016-11-24 16:32:30 | General

மேற்கிந்தியாவுக்கு  எதிரான முத்தரவு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில்  கடைசி பந்தில் அசத்திய இலங்கை அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை, மேற்கிந்திய அணிகள் முத்தரப்பு  ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. புலவாயோ நகரில் நடந்த லீக் போட்டியில் இலங்கை மேற்கிந்திய அணிகள் மோதின.  நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.


இலங்கை அணிக்கு குசால் பெரேரா (7) ஏமாற்றினார். தனஞ்ஜெய டி சில்வா( 54) அரைச்சதம் கடந்தார்.அபாரமாக ஆடிய திக்வெல ( 94), குசால் மெண்டிஸ் ( 94) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தனர். ஷெஹன் ஜெயசூர்யா ( 9), குணரத்ன ( 6) நிலைக்கவில்லை. கப்டன் உபுல் தரங்கா ( 26), பத்திரன (24*) ஆறுதலளிக்க இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 330 ஓட்டங்கள் குவித்தது. மேற்கிந்தியா சார்பில் ஹோல்டர் 3 விக்கெட் கைப்பற்றினார்.


கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய அணிக்கு சார்ல்ஸ் ( 26) சுமாரான தொடக்கம் கொடுத்தார். கிரெய்க் பிராத்வைட் ( 16), ஹோப் (25),  காடர் (6), ராவ்மன் பாவெல் ( 10) நிலைக்கவில்லை. அசத்தலாக ஆடிய எவின் லூயிஸ் (148) சதம் கடந்த கைகொடுத்தார்.


கார்லஸ் பிராத்வைட் ( 19),  நர்ஸ் ( 2), பென் ( 11) சோபிக்கவில்லை. மேற்கிந்திய வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரதீப் வீசிய 50 ஆவது ஓவரில் கடைசி பந்தில் கப்டன் ஹோல்டர் ஒரு ஓட்டம் மட்டும் எடுத்தார்.

மேற்கிந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 329 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஹோல்டர் ( 45) ஆட்டமிழக்காமலிருந்தார்.


இலங்கை சார்பில் குலசேகரா, லக்மல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இலங்கையின் குசால் மென்டிஸ் வென்றார்.


இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை என 11 புள்ளிகளுடன் இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.

 

TOTAL VIEWS : 884
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0skyv
  PLEASE ENTER CAPTA VALUE.