இங்கிலாந்து அணி அறிவிப்பு
2016-10-26 17:48:44 | General

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.


நவம்பர் 9 ஆம் திகதி ராஜ் காட்டில் முதல் டெஸ்ட் தொடங்குகிறது. டிசம்பர் 16 ஆம் திகதி சென்னையில் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது.

பின்னர் இங்கிலாந்து அணி நாடு திரும்பி ஜனவரி மாதம் மீண்டும் இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.


டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பங்களாதேஷ் தொடரில் விளையாடியவீரர்கள் அப்படியே இடம் பெற்று உள்ளனர். அந்த அணி பங்களாதேஷில் இருந்து இந்தியா வருகிறது.


தோள் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீரரான அண்டர்சன் பங்களாதேஷ் தொடரில் ஆடவில்லை. அதில் இருந்து அவர் இன்னும் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடவில்லை.

விசாகப்பட்டினத்தில் 17 ஆம் திகதி தொடங்கும் 2 ஆவது டெஸ்டிலும் அவர் விளையாடுவது சந்தேகமே.  3 ஆவது டெஸ்டில் இருந்து அவர் அணியோடு இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:


அலிஸ்டர்குக் (கப்டன்), மொய்ன் அலி, ஜாபர் அன்சாரி, பேர் ஸ்டோவ் (விக்கெட் காப்பாளர்), ஜேக்பால், பேலன்ஸ், கரேத் பேட்டி, ஸ்டூவர்ட் புரோட், பட்லர் (விக்கெட் காப்பாளர்), பென்டக்கெட், ஸ்ரீவன் பின், ஹசீப் ஹமீது, ஆதில் ரஷீத், ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், கிறிஸ்வோகஸ். 

 

TOTAL VIEWS : 924
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e7ocy
  PLEASE ENTER CAPTA VALUE.