யாசிர் ஷா புதிய சாதனை
2017-10-10 11:02:19 | General

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தொடர்ந்து ஐந்து டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யாசிர் ஷா திகழ்ந்து வருகிறார். 31 வயதாகும் இவர், ஏற்கனவே குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அஸ்வின் 18 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி 3 ஆவது இடத்தில் உள்ளார்.


தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்றுவரும் 2 ஆவது டெஸ்டில் திரிமானேயின் விக்கெட்டை வீழ்த்தியபோது குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை வக்கார் யூனிஸ் உடன் பகிர்ந்துள்ளார். வக்கார் யூனிஸ் 27 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.


முதல் இனிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் தொடர்ந்து ஐந்து டெஸ்ட்  போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

TOTAL VIEWS : 186
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f2irj
  PLEASE ENTER CAPTA VALUE.