தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து நொருக்கிய பாக். ரசிகர்கள்
2017-06-05 18:08:41 | General

சம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் தோல்வியடைந்த விரக்தியில் அந்நாட்டு ரசிகர்கள் ஆங்காங்கே தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தினார்கள். 


ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த  போட்டியில் 
இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி 124 ஓட்டங்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  


அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் விரக்தியில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆங்காங்கே தொலைக்காட்சி பெட்டிகளை வீதியில் தூக்கிப் போட்டும் , கல்லால் அடித்தும் சுக்குநூறாக உடைத்தனர். 


அதேபோல பாகிஸ்தானில் உள்ள ஒரு ரசிகர் அந்த அணி தோல்வியடைந்த 
செய்தியை ரி.வி.யில் பார்த்து விட்டு திடீரென கோபமடைந்தார். 


பின்னர், அருகில் இருந்தவர்கள் தடுத்தும் அதை கேட்காமல் தன்னிடம் இருந்த சுத்தியலை எடுத்து தன் வீட்டு தொலைக்காட்சி பெட்டியை கோபத்தில் அடித்து உடைத்தார். 


அதேபோல பாகிஸ்தானை இந்தியா வென்ற உடன் கோபத்தில் ஒருவர் பித்தளை செம்பை வைத்து ஓங்கி அடித்து ரி.வி.யை உடைத்தார். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 

TOTAL VIEWS : 182
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ipm0y
  PLEASE ENTER CAPTA VALUE.