இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லும்?
2017-06-30 15:38:02 | General

இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருட இறுதிக்குள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.


2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதுகாப்புப் படையினர் ஐவர் உயிரிழந்ததுடன், இலங்கை அணி வீரர்கள் ஐவர் உட்பட பலர் காயமடைந்ததையடுத்து அந்த நாட்டுக்கு இதுவரை எந்தவொரு சர்வதேச அணியும் பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை.


தங்கள் நாட்டுக்கு வந்து போட்டிகளில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்தும் அழைப்புகளை விடுத்து வருகின்ற போதிலும் இதுவரை எந்தவொரு நாடும் அங்கு கிரிக்கெட் விளையாட செல்ல மறுத்துவிட்டன.


இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக அந்த நாடு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திவரும் நிலையில், இவ்வருடத்திற்குள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக இலங்கை அணி ஆராய்ந்து வருவதாக பாகிஸ்தான் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை பாகிஸ்தான் செல்வது குறித்து தாங்கள் இதுவரை எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லையெனவும் எனினும் இறுதி முடிவு எடுக்கு முன்னர் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்புக் குழுவொன்று பாகிஸ்தான் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.


அண்மையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முன்னேற்றம் குறித்து இலங்கை அதிகாரிகள் திருப்தி தெரிவித்திருந்ததாகவும் இதனால் இலங்கை தரப்பு அங்கு தங்கள் அணியை அனுப்பும் என தாங்கள் நம்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் கூறியுள்ளார். 


இதேவேளை பாகிஸ்தானின் தேசிய அணிகள் பங்கேற்பதற்கு முன்னர் இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் தங்கள் கனிஷ்ட அணிகளை அங்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

TOTAL VIEWS : 365
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dg0vy
  PLEASE ENTER CAPTA VALUE.