நடுவரின் நகைச்சுவை
2017-03-20 18:38:57 | General

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இனிங்ஸில் 603 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் நடுவர் கிறிஸ்கேபனி (நியூஸிலாந்து) செய்த செயல் அனைவரையும் சிரிக்க வைத்தது.


ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இனிங்ஸில் 603 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா இரட்டை சதமும், சஹா சதமும் அடித்து அசத்தியுள்ளனர்.


இந்திய வீரர் புஜாரா 142 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீதிய ‘ஷோட் பிட்ச்’ பந்தை விளாச முயற்சித்தார்.

ஆனால் பந்து துடுப்பு மட்டையில் படாமல் விக்கெட் காப்பாளர் மத்யூ வேட்டின் கையில் சிக்கியது. விக்கெட் காப்பாளரோ பந்து வீசிய ஹேசில்வுட்டோ அவுட் கேட்டு முறையீடு செய்யவில்லை.


அதற்குள் நடுவர் கிறிஸ் கேபனி (நியூஸிலாந்து) அவுட் என்பது போல் விரலை உயர்த்தத் தொடங்கினார். பிறகு அவுஸ்திரேலிய வீரர்கள் முறையீடு செய்யாததால் சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக தூக்கிய விரலை அப்படியே தொப்பி மீது சொறிந்தபடி சமாளித்துவிட்டார். 


அவரது செயல் விக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்களை திகைப்புக்குள்ளாக்கியது. அதேநேரத்தில் மற்றவர்கள் நடுவரின் செயல் கண்டு சிரித்து விட்டனர்.

TOTAL VIEWS : 390
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r2mji
  PLEASE ENTER CAPTA VALUE.