மலிங்கவுக்கு போட்டித் தடை?
2017-06-27 16:03:30 | General

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை “குரங்கு” என்று விமர்சித்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சில போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையின் களத்தடுப்பு மோசமாக இருந்தது. முக்கிய “கேட்ச்களைத் தவறவிட்டனர்.


இதனால் இலங்கை அணி வீரர்களின் உடல் தகதி குறித்து தயாசிறி ஜெயசேகர  கடுமையாகச் சாடியதுடன் பல வீரர்கள் பானை வயிற்றுடன் பந்து வீச  பல வீரர்கள் பந்து வீச முடியாது தவிப்பதாகவும் கூறியிருந்தார்.


இது பற்றி கருத்துத் தெரிவித்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, நாற்காலியை அலங்கரிப்பவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை. இது கிளியின் கூடு பற்றிக் குரங்கு பேசுவது போல் இருக்கிறது. கிளிக் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்? என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


இதையடுத்து மலிங்கவிடம் விசாரணை நடத்த அமைச்சர் தயாசிறி உத்தரவிட்டார். விசாரணை நடத்த இலங்கை சபை நிர்வாகி ஆஷ்லி டி சில்வா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மலிங்கவிடம் நேற்று விசாரணை நடத்தவிருந்தது.

அதன்பின் அறிக்கையை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுக்கும். மலிங்கமீது கிரிக்கெட் சபையின் ஒப்பந்த விதியை மீறி விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சில போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது.

TOTAL VIEWS : 368
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2buqm
  PLEASE ENTER CAPTA VALUE.