ஜனவரியில் 85, டிசம்பரில் 1
2018-01-02 11:29:33 | General

உலக கிரிக்கெட் அரங்கில் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்கள் தொடர்பான தரவரிசைப் பட்டியல் அவ்வப்போது வெளிவரும்.

அப்படி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 85 ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும்.

ஒருநாள் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்த வருடம் பெரிய அளவில் சாதித்தது ஹஸன் அலி மட்டுமே என்று கூறலாம்.

தற்போது இந்த வருட இறுதியில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 759 புள்ளிகளுடன் இவர் முதலிடத்தில் உள்ளார்.

2016 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி தற்போது வரை 26 ஒருநாள் போட்டிகளில் 56 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இவரின் சராசரி 19.82. இவர் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இபபடி ஒரே ஆண்டில் தன்னுடைய திறமையால் முதல் இடத்திற்கு வந்துள்ள ஹசன் அலிக்கு தற்போது வயது 23 மட்டுமே ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

TOTAL VIEWS : 68
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uwi5e
  PLEASE ENTER CAPTA VALUE.