முன்னாள் வீரர்களை சந்திக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர்
2017-06-27 15:31:09 | General

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.


அண்மைக்காலமாக இலங்கை அணி மோசமான நிலையில் உள்ளதால் அதனை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவரும் நோக்கிலே கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளுக்கு அப்பால் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முடிவு செய்துள்ளார்.


இதற்கமைய இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளருமான சித்தார் பெத்தமுனி மற்றும் முன்னாள் கப்டன்களான குமார் சங்ககார , மஹேல ஜெயவர்த்தன ஆகியோருடன் உலக சாதனையாளரான முத்தையா முரளிதரனையும் சந்திப்பதற்கு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்படி வீரர்களை சந்தித்து சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

TOTAL VIEWS : 230
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wf0gf
  PLEASE ENTER CAPTA VALUE.