ரியல் மாட்ரிட் அபார வெற்றி
2017-11-08 09:45:26 | General

லா லிகா கால்பந்து லீக் தொடரில் லாஸ் பால்மாஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 30 என வெற்றி பெற்றது. 


லா லிகா கால்பந்து லீக் தொடரில் ஞாயிறு நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட், லாஸ் பால்மாஸ் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டி ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. 
இந்த சீசனில் ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது. 


ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு கோர்னர் வாய்ப்பு கிடைத்தது. கோர்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை தலையால் முட்டி அந்த அணி வீரர் கேஸ்மிரா அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 10 என முன்னிலைப் பெற்றது. 


2வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ப்ரீ ஹிக் ஷொட்டை லாஸ் பால்மாஸ் கோல் காப்பாளர் தடுத்துவிட்டார். பந்து நேராக மார்கோ சென்சியோவை நோக்கி வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்தை கோல் கம்பம் நோக்கி உதைத்தார். இரண்டு தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் காப்பாளர் ஆகியோரை ஏமாற்றி பந்து கோல் எல்லைக்குள் தஞ்சம் புகுந்தது. 


74வது நிமிடத்தில் கிறிஸ்ரியானோ ரொனால்டோ கொடுத்த பாஸை இஸ்கோ சுலபமாக கோலாக மாற்ற ரியல் மாட்ரிட் 30 என வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 11 போட்டிகள் முடிவில் 23 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பார்சிலோனா 31 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 

TOTAL VIEWS : 93
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2qdrm
  PLEASE ENTER CAPTA VALUE.