திரிமானே மீது ரசிகர்கள் சீற்றம்
2017-11-29 09:43:22 | General

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் தோல்வி காரணமாக, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திரிமானேயின் மோசமான ஆட்டத்தினை, ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இலங்கை அணி, சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டிராவும் இரண்டாவது டெஸ்டில் தோல்வியும் கண்டிருந்தது.

இந்நிலையில் , இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமானேயின் ஆட்டத்தை ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

திரிமானே, இந்தியாவுக்கு எதிராக நடந்த முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும்   51, 7, 9 மற்றும் 23 ஓட்டங்களே 4 இனிங்ஸ்களிலும் எடுத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை எனக் கூறும் ரசிகர்கள், "திரிமானேயின் துடுப்பாட்டம் பார்ப்பதற்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது'. "திரிமானேயைவிட லக்மல் மிகவும் திறமை வாய்ந்தவர்' என்பன போன்ற கருத்துகளையும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

TOTAL VIEWS : 170
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
im2vd
  PLEASE ENTER CAPTA VALUE.