இலங்கை அணியை 7 தடவைகள் எச்சரித்த நடுவர்கள்
2017-06-06 17:55:06 | General

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடனான முதல் லீக் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசத் தவறியமையால்  இலங்கை அணியின் கப்டன் உபுல் தரங்கவுக்கு இரு போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன் அணி வீரர்கள் அனைவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. 


இந்தப் போட்டியில்  இலங்கை அணி பந்துவீச 4 மணித்தியாலங்களும் 7 நிமிடங்களும் எடுத்துள்ளது.  வழமையாக சர்வதேச ஒருநாள் போட்டியில்  50 ஓவர்களை வீசி முடிக்க மூன்றரை மணி நேரமே எடுக்க வேண்டும். இதற்கு மேல் நேரத்தை எடுத்தால் அதற்காக அணிக் கப்டனும் அணியும் தண்டிக்கப்படுவது வழமையாகும்.


இலங்கை அணி அன்றைய போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசத் தவறி வந்ததை போட்டியின் களநடுவர்கள் இருவரும் பல தடவைகள் எச்சரித்திருந்தனர். முதல் பத்து ஓவர்களுக்குள் இரண்டு தடவை அணித் தலைவர் உபுல் தரங்க எச்சரிக்கப்பட்டிருந்தார்.


அதேபோல் நடு ஓவர்களிலும் கடைசி ஓவர்களிலும் மேலும் ஐந்து தடவை எச்சரிக்கப்பட்டார். மொத்தத்தில் இந்தப் போட்டியில் களநடுவர்கள் ஏழு தடவை கப்டன் உபுல் தரங்கவை இதற்காக எச்சரித்திருந்த போதிலும் வீசி முடிக்க வேண்டிய நேரத்தை விட மேலதிகமாக 37 நிமிடங்களை இலங்கை அணி எடுத்திருந்தது.


ஒரு போட்டியில் மேலதிகமாக 37 நிமிடம் எடுப்பது மிகவும் பாரதூரமான விதிமீறல் என்பதால் அணித் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டதுடன் அன்றைய போட்டியில் அவர் பெற்ற சம்பளத்தில் 80 வீதமும் ஏனைய வீரர்களுக்கு  60% மும் அபராதமாக விதிக்கப்பட்டன. 

TOTAL VIEWS : 229
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
fejy1
  PLEASE ENTER CAPTA VALUE.