இலங்கை அணியை மீட்க தீவிர முயற்சிகள்
2017-08-10 11:34:19 | General

இலங்கை அணியை மீட்டெடுத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாக அணி நிர்வாகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன்,  பல்வேறு ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. 


இலங்கை அணி அண்மைக் காலமாக மோசமாக ஆடிவருவதுடன் தொடர்ச்சியாக தோல்விகளையும் சந்தித்துவருகின்றது.  அணிவீரர்கள் பலர் தொடர்ச்சியாக காயமடைவதும் திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அணிக்குள் சேர்க்கப்படாததும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. 


கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி, மூன்றாவது டெஸ்டில் காயம் காரணமாக சுழற் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தும் இல்லாததால் மேலும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே, வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தொடையில் ஏற்பட்ட தசை நெரிவு காரணமாக இரண்டாவது டெஸ்டில் குறிப்பிட்ட ஓவர்களே பந்து வீசும் நிலை ஏற்பட்டது. அவர் மூன்றாவது டெஸ்டில் விளையாட மாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லாமையும் இருக்கும் சிலரும் காயமடைந்ததும் அணிக்குள் தெரிவாகும் பந்து வீச்சாளர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதால் வீரர்கள் காயமடையும் நிலை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


ஓரிரு சிறந்த பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் போதும் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓவர்களை வீச வேண்டியிருப்பதால் காயமடைவதற்கான வாய்ப்பு பெருமளவில்  அதிகரிப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இதற்கு பரிகாரம் தேடும் நடவடிக்கைகள் குறித்தும்  அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

TOTAL VIEWS : 135
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vf4su
  PLEASE ENTER CAPTA VALUE.