இலங்கை-இந்திய கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது 
2017-12-01 15:25:22 | Leftinraj

சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை 2-ந்தேதி தொடங்குகிறது.

நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. மேலும் டெஸ்டை ‘டிரா’ செய்தாலே தொடரை வென்று விடும்.

இந்திய அணி 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடரை இழக்காமல் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. தற்போது 9-வது தொடரை வெல்லும் நிலையில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் வீராட்கோலி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் முதல் டெஸ்டில் சதமும் (104 ரன்), 2-வது டெஸ்டில் இரட்டை சதமும் (213) அடித்து இருந்தார். இதனால் டெல்லி டெஸ்டிலும் செஞ்சூரி அடித்து ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து இருந்தனர். ரகானே திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார். தவான் அணிக்கு திரும்பியதால் ராகுல் கழற்றிவிடப்படலாம்.

பந்துவீச்சில் அஸ்வின் மிகவும் திறமையுடன் உள்ளார். அவர் கடந்த போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன்மூலம் அதிவேகத்தில் 300 விக்கெட்டை கைப்பற்றி சாதனை புரிந்தார்.

இதேபோல ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இலங்கை அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. பலவீனத்துடன் காணப்படும். அந்த அணி குறைந்தபட்சம் ‘டிரா’ செய்யவாறு கடுமையாக போராடும்.

ஹெராத் காயத்தால் விலகியது அந்த அணிக்கு மேலும் பாதிப்பே.

இரு அணிகளும் நாளை மோதுவது 44-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 43 போட்டியில் இந்தியா 20-ல்இ இலங்கை 7-ல் வெற்றி பெற்றன. 16 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), தவான், முரளிவிஜய், ராகுல், புஜாரா, ரகானே, ரோகித்சர்மா, விர்த்திமான்சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி, குல்தீப்யாதவ், விஜய்சங்கர்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, சமரவிக்ரமா, திரிமானே, மேத்யூஸ், டிக்வெலா, பெரைரா, ‌ஷன்கா, லக்மல், காமகே, ரோசன் சில்வா, ‌ஷன்டகன், தில்ருவன் பெரைரா, தனஞ்செயா டிசில்வா, விஷ்வா பெர்னாண்டோ.

TOTAL VIEWS : 119
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
guov0
  PLEASE ENTER CAPTA VALUE.