"அடுத்த 10 வருடங்கள் குஷல் மென்டிஸ் அணிக்காக ஆட வேண்டும்"
2017-11-08 09:43:39 | General

இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான குஷல் மென்டிஸ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென தாங்கள் விரும்புவதாக அணித் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹாம் லப்ரோய் தெரிவித்துள்ளார்.


இந்தியா செல்லும் இலங்கை அணியில் குஷல் மென்டிஸ் இடம்பெறவில்லை. உடற்தகுதிக்கான தேர்வில் இவர் தேறியிருந்த போதிலும், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கக் கூடிய உடற்தகுதியை கொண்டிருக்கவில்லையெனக் கூறி குஷல் மென்டிஸை தேர்வுக் குழுவினர் நிராகரித்துள்ளனர்.


இந்த நிலையில், குஷல் மென்டிஸ் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முன்னாள் கப்டன் மஹேல ஜெயவர்தன, குஷல் மென்டிஸ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர் அணியில் விளையாடா விட்டாலும் இந்தியாவுக்கு அழைத்துச்சென்று போட்டி குறித்து அனுபவத்தை அவர் பெறுவதற்கு வழியேற்படுத்தியிருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.


இந்த நிலையில், குஷல் மென்டிஸை அணியில் சேர்க்காதது குறித்த தங்களது முடிவை தேர்வுக் குழுத் தலைவர் கிரஹாம் லப்ரோய் நியாயப்படுத்தியுள்ளார்.


அவரை நாங்கள் தூக்கியெறியவில்லை. இந்தியாவிற்கு அழைத்துச் செல்லாது அவரை வெறுமனே இலங்கையில் அமர்த்தியிருக்க விரும்பவுமில்லை. அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று தனது ஆட்டத் திறமையையும் உடற்தகுதியையும் மேம்படுத்த வேண்டுமென்பதற்காகவே அவர் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவில்லை. 


அவர் ஒரு சிறந்த வீரர். சதமடிப்பதிலும் வல்லவர். மிகுந்த நம்பிக்கையுடன் ஆடக் கூடியவர். தற்போதைய நிலையில் அவரது பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியாவுக்குக் கூட்டிச் சென்று வெறுமனே மைதானத்திற்கு வெளியே அமர்த்திவைப்பதைவிட உள்ளூரில் அவர் போட்டிகளில் பங்கேற்பது அவரது வளர்ச்சிக்கு உதவும்.


அடுத்த 10 வருடங்களுக்கு மேல் அவர் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்கேற்ப அவரைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 140
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
aao8u
  PLEASE ENTER CAPTA VALUE.